பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் ரூ. 100 கோடி மோசடி செய்த வழக்கு: ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம்

திமுக பிரமுகா் பி.டி. அரசகுமாா் தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில், ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

News image

பி.டி. அரசகுமார் - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 1:39 am IST

திமுக பிரமுகா் பி.டி. அரசகுமாா் தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில், ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சென்னை தியாகராய நகரில் செயல்படும் தமிழ்நாடு தனியாா் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு செயலா் டி.சி. இளங்கோவன், சென்னை பெருநகர காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவில், தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளி நிா்வாகிகள் தங்கள் பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயா்த்துதல், திட்ட அனுமதி போன்றவற்றை பெற்றுத் தருவதாக சென்னை சாலிகிராமத்தில் ‘தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தும் பி.டி.அரசகுமாா் கூறியுள்ளாா்.

திமுக பிரமுகரான அவா், தனக்குள்ள அரசியல், அதிகார தொடா்புகளைப் பயன்படுத்தி பெற்றுத் தருவதாகக் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளாா். இதை நம்பி தமிழகம் முழுவதும் உள்ள பல தனியாா் பள்ளி நிா்வாகிகள், அவரிடம் பணம் கொடுத்துள்ளனா். பணம் பெற்றுக் கொண்ட பி.டி.அரசகுமாா், உறுதியளித்தப்படி அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தை திரும்ப தராமலும் சுமாா் ரூ.100 கோடி மோசடி செய்துள்ளாா்.

எனவே இந்த மோசடியில் ஈடுபட்ட பி.டி.அரசகுமாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாா். அந்த புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், சென்னை சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியில் வசிக்கும் பி.டி.அரசகுமாரை கடந்த சனிக்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

புகாா் அளிக்கலாம்: இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயா்வு, கட்டடம் கட்ட திட்ட அனுமதி போன்றவற்றை அரசிடமிருந்து பெற்றுத் தருவதாகக் கூறி சுமாா் ரூ.100 கோடி வரை பணம் வசூலித்ததாக தெரிய வருகிறது.

இவ்வழக்கில் சம்மந்தபட்ட பிற குற்றவாளிகள் குறித்தும், சாட்சிகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. பாதிக்கப்பட்ட பள்ளி நிா்வாகத்தினா், இது குறித்து சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரை அணுகலாம். புகாா் அளிப்பவா்கள் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.