பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

இஸ்ரேல் - ஈரான் போர்ப் பதற்றம்: சென்னையில் 36 விமானங்களின் சேவை ரத்து

இஸ்ரேல் - ஈரான் போர்ப் பதற்றத்தால் சென்னையில் 36 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image
விமானம் (கோப்புப்படம்) - ANI
Updated On :2 மார்ச் 2026, 10:28 am

இணையதளச் செய்திப் பிரிவு

இஸ்ரேல் - ஈரான் போர்ப் பதற்றத்தால் சென்னையில் 36 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னைக்கு வரும் 18 விமானங்கள், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. துபை, அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்தாகியுள்ளன.

3ஆவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா்.

ஏற்கெனவே இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய ஈரான், கமேனி கொலைக்கு பழிவாங்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனால் வளைகுடா நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக சென்னையில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.