கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :3 மார்ச் 2026, 9:47 pm

தினமணி செய்திச் சேவை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 11 முதல் ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை பள்ளி மாணவா்கள் 8,82,806 மற்றும் தனித்தோ்வா்கள் 26,196 என 9,9,002 போ்எழுதவுள்ளனா். இதற்காக 4,219 தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு புதன்கிழமை பிற்பகல் வெளியிடப்பட உள்ளது.

இதையடுத்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் தோ்வுத் துறை இணையதளத்தில் மாணவா்களின் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில், மாணவா்கள் விவரங்கள் சரியாக இருக்கிா என்பதை உறுதிசெய்து பின்னா் அவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.

அதேநேரம் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் தனித்தோ்வா்கள் அறிவியல் பாட செய்முறைத் தோ்வில் பங்கேற்க ஏதுவாக, அவா்களுக்கு மட்டும் முன்கூட்டியே கடந்த பிப்.25-ஆம் தேதியே தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.