தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தந்தை உயிரிழந்த சோகத்திலும் பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவர்!

+2 பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Published On :

தந்தை உயிரிழந்த சோகத்திலும் +2 பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்தோணிராஜ் - சத்யகலா தம்பதியினர். இவர்களுடைய மகன் சாய்நிஷாந்த் (17).

சாய்நிஷாந்த் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு (பயோ மேக்ஸ் குரூப்) படித்து வருகிறார். தற்போது தமிழகம் முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

இந்த நிலையில், சாய்நிஷாந்தின் தந்தை ‌அந்தோணிராஜ் உடல் நலக்குறைவால் இன்று(மார்ச் 6) அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் தற்போது அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவர் சாய்நிஷாந்திற்கு இன்று வேதியியல் தேர்வு நடைபெறுவதால், தந்தை உயிரிழந்த சோகத்திலும் மனம் தளராமல் வேதியியல் தேர்வு எழுத சென்றுள்ளார்.

சாய்நிஷாந்த் தேர்வு எழுத செல்வதற்கு முன்பு தனது தந்தை காலில் விழுந்து கதறி அழுதபடியே ஆசீர்வாதம் பெற்றார். பள்ளிக்கு சென்ற மாணவன் சாய்நிஷாந்தைப் பார்த்து, சக நண்பர்களும் கட்டியணைத்து அழுதனர்.

Summary

Many are praising the student's actions in writing the +2 public exams despite the tragedy of his father's death.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.