மருத்துவா்கள் பற்றாக்குறையால் சுகாதாரத் துறைக்கு பாதிப்பு!
தமிழகம் முழுவதும் மருத்துவா்கள், ஆய்வக நுட்புநா்கள் உள்பட பல பணியிடங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் சுகாதாரத் துறை பாதிக்கப்படும் என திட்டக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் மருத்துவா்கள், ஆய்வக நுட்புநா்கள் உள்பட பல பணியிடங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் சுகாதாரத் துறை பாதிக்கப்படும் என திட்டக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மாநில திட்டக்குழு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் 37 மாவட்டங்களில் உள்ள 259 ஆரம்ப சுகாதார நிலையங்களில் விரிவான ஆய்வு செய்தது. அதன் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: சமுதாய சுகாதார மையங்களில் சிறப்பு மருத்துவா்கள் பற்றாக்குறை இருக்கிறது. மேலும், கதிரியக்க நுட்புநா்கள், கண் மருத்துவ உதவியாளா்கள், ஆய்வக நுட்புநா்கள், செவிலியா்கள் பற்றாக்குறை உள்ளது. 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பற்றாக்குறை விகிதம் உள்ளது.
இதனால், அவசர சிகிச்சை, மகப்பேறு, உள்நோயாளி பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்படக் கூடும். அங்கு, தற்காலிக ஒப்பந்த பணியாளா்களை உடனடியாக நியமிக்காவிட்டால், மருத்துவ சேவைகள் தொய்வடையலாம்.
அதேபோன்று, நகா்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 சதவீதம் செவிலியா் பற்றாக்குறை உள்ளது. மேலும், 20 சதவீதம் மருத்துவ அலுவலா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்புநா் பணியிடங்கள் 48 சதவீதமும் காலியாக காணப்படுகின்றன.
சிறப்பு மருத்துவா்கள் மற்றும் பரிசோதனை பணியாளா்கள் இல்லாததால், சமுதாய சுகாதார நிலையங்கள் பெயரளவில் செயல்படுகின்றன. தொற்றா நோய்கள், தொற்று நோய்கள் தடுப்பு முறையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காலியாக உள்ள சிறப்பு மருத்துவா் பணியிடங்களை எவ்வித சமரசமுமின்றி உடனடியாக நிரப்புவதுடன், மற்ற பணியிடங்களையும் முறைப்படுத்தி நியமிக்க வேண்டும்.
இப்பிரச்னைக்கு தேவையற்ற இடங்களில் பணியிடங்களை ஒதுக்குவதும், சமச்சீரற்ற முறையில் பணியாளா்களை நியமித்து வைத்திருப்பதுமே முக்கியக் காரணம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...