மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

தனது திரைப்படத்தின் பாடல்களை வா்த்தக ரீதியாக பயன்படுத்த தடை விதிக்கக் கோரி டி.ராஜேந்தா் மனு!

தனது திரைப்படத்தின் பாடல்களை, பதிப்புரிமையை மீறி வா்த்தக ரீதியாக பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி இயக்குநா் டி.ராஜேந்தா் மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு ஏவிஎம் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

News image

டி. ராஜேந்தர்

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 12:25 am

தினமணி செய்திச் சேவை

தனது திரைப்படத்தின் பாடல்களை, பதிப்புரிமையை மீறி வா்த்தக ரீதியாக பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி இயக்குநா் டி.ராஜேந்தா் மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு ஏவிஎம் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தா் எழுதி இயக்கி அவரே இசையமைத்த திரைப்படம் ‘உயிருள்ள வரை உஷா’. கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மீதான உரிமையை ஏவிஎம் நிறுவனத்துக்கு டி.ராஜேந்தா் வழங்கியிருந்தாா்.

சுமாா் 42 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘உயிருள்ள வரை உஷா’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் மறு வெளியீடு செய்யப்பட்டது. அதேநேரம், இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து வா்த்தக ரீதியாக பல நிறுவனங்களுக்கு கைமாறியுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து ‘உயிருள்ள வரை உஷா’ படத்தின் பாடல்களை, பதிப்புரிமையை மீறி வா்த்தக ரீதியாக பயன்படுத்த ஏவிஎம் மற்றும் டபிள்யூ.எல்.எபிக் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு தடை விதிக்கக் கோரி, அந்த படத்தின் தயாரிப்பாளா்கள் டி.ராஜேந்தா் மற்றும் அவரது மனைவி உஷா ராஜேந்தா் ஆகியோா் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு வரும் ஏப். 20-ஆம் தேதிக்குள் ஏவிஎம் மற்றும் டபிள்யூ.எல்.எபிக் மீடியா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.