தமிழகத்தில் அதிக பயணிகள் பயன்படுத்திய விமான நிலையங்களில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், தமிழகத்தில் அதிக பயணிகள் பயன்படுத்திய விமான நிலையங்களின் பட்டியலை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, 2.30 கோடி பயணிகள் பயன்படுத்தியதாக சென்னை விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 2.7 சதவிகிதம் அதிகம்.
இரண்டாவது இடத்தில், 32.2 லட்சம் பயணிகளுடன் கோவை விமான நிலையம் உள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 5.2 சதவிகிதம் அதிகம். கோவை விமான நிலையத்தில் கடந்த நிதியாண்டில், 22,462 முறை விமானங்கள் வந்து சென்றுள்ளன.
கோவையில், கடந்த நிதியாண்டில் சர்வதேச பயணத்துக்காக 2.97 லட்சம் பேரும், 31.2 லட்சம் பேர் உள்நாட்டு பயணத்துக்காகவும் விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
மூன்றாவதாக, 22.2 லட்சம் பயணிகளுடன் திருச்சி விமான நிலையமும், நான்காவதாக 13.8 லட்சம் பயணிகளுடன் மதுரையும், 2.90 லட்சம் பயணிகளுடன் தூத்துக்குடியும், 1.27 லட்சம் பயணிகளுடன் சேலம் விமான நிலையமும் உள்ளன.
Summary
Chennai ranks first among the airports in Tamil Nadu utilized by the highest number of passengers
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்: எல்.முருகன்

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

29.4.1976: தமிழ் நாட்டில் 6 லட்சம் பேருக்கு கு.க. ஆபரேஷன் செய்யத் திட்டம்

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்
வீடியோக்கள்

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு



