அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

10-ல் ஒரு இடத்தில் மட்டுமே தேமுதிக முன்னிலை!

திமுக கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

News image

விஜய பிரபாகரன் - (கோப்புப் படம்)

Updated On :4 மே 2026, 11:57 am IST

திமுக கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காலை 11.30 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளிலும், அதிமுக 73 தொகுதிகளிலும், திமுக 53 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் 10 இடங்களில் களம் கண்ட தேமுதிக ஒரு இடத்தில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது.

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன் 1212 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். (காலை 11.30 மணி நிலவரம்)

விருதாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் 939 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார். எஞ்சிய தேமுதிக வேட்பாளர்களும் பின்னடைவில் இருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.