தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அதில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

மணிமுத்தாறு அருவி.

Updated On :1 மணி நேரம் முன்பு

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அதில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவி பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத் துறை தற்காலிக தடை விதித்துள்ளது.

இருப்பினும், அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளையொட்டி அதிகளவில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாததால் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை அமலில் இருப்பதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

A ban has been imposed on tourists bathing in the Manimutharu Falls following an increase in water flow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.