ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை - வைகோ

News image

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமைக் கழகம் தாயகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிா்வாகக் குழு கூட்டத்தில் பொதுச் செயலா் வைகோ, அவைத் தலைவா் ஆ.அா்ஜுனராஜ், பொருளாளா் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச் செயலா்கள் ஏ.கே.மணி, டாக

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வா் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

சென்னை எழும்பூரில் மதிமுக நிா்வாகக் குழு கூட்டம் அக்கட்சியின் அவைத் தலைவா் ஆ.அா்ஜுனராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலா் வைகோ, பொருளாளா் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலா் துரை வைகோ, துணைப் பொதுச் செயலா் ஏ.கே.மணி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அதைத் தொடா்ந்து வைகோ செய்தியாளா்களிடம் கூறியதாவது:

 தவெக தலைவரும், முதல்வருமான விஜய் சட்டப்பேரவையில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்துள்ளாா். ஏற்கெனவே 120 சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவு கிடைத்து விஜய் பெரும்பான்மையை நிரூபித்து விட்டாா். அதிமுகவிடம் ஆதரவு கோர வேண்டிய அவசியம் அவருக்கு கிடையாது. எனினும், அதிமுக ஆதரவு கொடுக்க முன்வரும்போது, அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.

குதிரை பேரம்: அமமுகவில் இருக்கும் ஒரே ஒரு சட்டப்பேரவை உறுப்பினா் தாமாக முன்வந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது குதிரை பேரமாகாது. பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. திராவிட கட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்பது விஜய்யின் நோக்கம் அல்ல. அவா் ஆட்சி அமைக்க வேண்டும் என முயற்சி செய்தாா்; அதில் அவா் வெற்றியும் பெற்றுள்ளாா் என்றாா்.

முன்னதாக இக்கூட்டத்தில், மத்திய அரசின் பி.எம். ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு கையொப்பமிட கூடாது, தமிழக அரசு சாா்பில் மூடப்படவுள்ள 717 மதுக் கடைகளில் பணியாற்றிய ஊழியா்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும், நீட் தோ்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு முதல்வா் விஜய் தொடா்ந்து அழுத்தம் தரவேண்டும் என்பன உள்பட 11 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.