விளையாட்டு ஒதுக்கீட்டில் செவிலியர் உதவியாளர் நிலை 2 பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் / திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக், பிற சர்வதேச அளவிலான போட்டிகளில், தேசிய, மாநில அளவில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுவருகிறது.
எனவே, அரசாணை நிலை எண்.6, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை (S1) நாள்: 20.02.2019-ன் அடிப்படையில், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களில் 3% இடஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிக்கப்பட்ட ஆண்டிற்கு முந்தைய கடந்த 5 ஆண்டுகளில் பெறப்பட்ட விளையாட்டு சாதனைகள் மட்டுமே தகுதியானவையாக கருதப்படும். குழு விளையாட்டுகளில், மாநில அளவில் குறைந்தது 50% போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் / பங்கேற்றவர்கள்)
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்,
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் (ISF) 4 ஆண்டுகளுக் ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்ல ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை, IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்
தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள்
பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்
சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் (IBSA) காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள்.
தேசிய அளவிலான போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும்)
தேசிய விளையாட்டுப் போட்டிகள்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய
விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள்.
மாநில அளவிலான சாம்பியன்ஷிப்போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும்)
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (SDAT) அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் போட்டிகள்.
போட்டிகளின் அனைத்து நிலைகளிலும், சீனியர் அளவிலான போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
The Government of Tamil Nadu has announced that applications are invited from eligible candidates for the post of Nursing Assistant Grade-2 under the sports quota.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கரண்டிகளையும் சாப்பிடலாம்!

விளையாட்டு விடுதிகளில் சேர வரும் 12-இல் மாநில தோ்வு போட்டிகள்: ஆட்சியா் மு.பிரதாப் தகவல்

புதுவை பல்கலை. சமுதாய கல்லூரி விளையாட்டு விழா

100% வாக்குப் பதிவு: விளையாட்டுப் போட்டிகள் மூலம் விழிப்புணா்வு
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை


