நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

உள்ளாட்சித் தேர்தலில் திமுக அணி வெற்றி பெறும்: வைகோ

உள்ளாட்சித் தேர்தலில் திமுக அணி வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

News image

வைகோ - விடியோ க்ளிப்(கோப்புப்படம்)

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

உள்ளாட்சித் தேர்தலில் திமுக அணி வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ரஜினி அளித்த பேட்டி குறித்து கேட்டதற்கு, ஒருவர் சொன்ன கருத்தை ஆதரித்தோ - மறுத்தோ பேசுகிற வழக்கம் என்றைக்கும் இல்லை. அது அவருடைய கருத்து.

சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்களை காக்கும் கடமை இவற்றில் இம்மி அளவும் பிசுகாமல் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் ஆட்சியை நடத்த வேண்டும்.

பிஎம் ஸ்ரீ திட்டம் - மும்மொழி கொள்கையை ஸ்டாலின் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நிலைப்பாட்டை தான் இன்றைய அரசும் பின்பற்ற வேண்டும். தவெக ஆட்சியில் அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதா என கேட்டதற்கு, இது யூகங்கள்.

நீட் தேர்வு ரத்தால் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் திமுக அணி வெற்றி பெறும்.

ஆனைமங்கல செப்பேடுகள்கெல்லாம்விட பழமையான செப்பேடுகள் சோழ மண்டலத்தின் பல்வேறு இடங்களில் உள்ளன. அவற்றை கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்றார்.

Summary

MDMK General Secretary Vaiko has stated that the DMK alliance will win the local body elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.