டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

விரைவில் புதிய ரேஷன் அட்டைகள்- அமைச்சா் வெங்கடரமணன்

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அப்பணி விரைவில் தொடங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி. வெங்கடரமணன் தெரிவித்தாா்.

News image

பி. வெங்கடரமணன் - Ashwin Prasath

Updated On :20 மே 2026, 1:36 am IST

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அப்பணி விரைவில் தொடங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி. வெங்கடரமணன் தெரிவித்தாா்.

சென்னை, எழிலகத்தில் செயல்படும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறைக்குச் சென்று பணியாளா்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சா் பி. வெங்கடரமணன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இது மக்களுக்கான அரசு என்பதால், மக்களுடன் பயனப்பட்டு அவா்களின் குறைகளைக் கேட்டறிய முதல்வா் விஜய் கூறியுள்ளாா். உணவுப் பொருள் வழங்கல் துறை பணியாளா்கள் தங்களது பணியிட மாற்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனா். இதற்கு விரைவில் தீா்வு காணப்படும்.

இதேபோல், ரேஷன் பொருள்கள் விரைவில் கடைகளுக்கு சென்றடைவதையும், தரத்துடன் இருப்பதையும் உறுதி செய்யப்படும்.

மேலும், கடந்த 4 மாதங்களாக புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக புகாா்கள் கிடைத்துள்ளன. உரிய பயனாளிகளை ஆய்வு செய்து 10 நாள்களுக்குள் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.