இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு துறை ஒதுக்கீடு!

அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு துறை ஒதுக்கீடு பற்றி...

Portfolios

அமைச்சர்கள் ஷாஜகான், வன்னி அரசு - TNDIPR

Published On :22 மே 2026, 10:26 am IST

தமிழ்நாட்டின் அமைச்சர்களாக பதவியேற்ற வன்னி அரசு மற்றும் ஏ.எம். ஷாஜகானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகள் விவரங்களை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் மே 10 ஆம் தேதியும், காங்கிரஸின் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 23 பேர் அமைச்சர்களாக மே 21 ஆம் தேதியும் பதவியேற்றனர்.

அவர்களுக்கான துறைகள் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆளுநரும் ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்த நிலையில், விசிகவின் வன்னி அரசும், ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜகானும் இன்று காலை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாடு முதல்வர் விஜய் முன்னிலையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, வன்னி அரசுக்கு சமூக நீதித் துறையும், ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Portfolios Allocated to Ministers Vanni Arasu and Shahjahan!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.