கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 25) அறிவித்தார். இதேபோன்று, சிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதன்படி, கூட்டுறவு வங்கிகளில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ. 50,000 கடன் பெற்றிருந்தால், முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். சிறு விவசாயிகளுக்கு 50% (ரூ. 25,000) தள்ளுபடி செய்யப்படும்.
ரூ. 50,001 - ரூ. 60,000 வரை கடன் பெற்றிருந்தால்,
குறு விவசாயிகளுக்கு ரூ. 40,000 தள்ளுபடி
சிறு விவசாயிகளுக்கு ரூ. 20.000 தள்ளுபடி.
ரூ. 60,001 - ரூ.70,000 வரை கடன் பெற்றிருந்தால்,
குறு விவசாயிகளுக்கு ரூ. 30,000 தள்ளுபடி
சிறு விவசாயிகளுக்கு ரூ. 15,000தள்ளுபடி.
ரூ. 70,001-ரூ. 80,000 வரை கடன் பெற்றிருந்தால்,
குறு விவசாயிகளுக்கு ரூ. 20,000 தள்ளுபடி
சிறு விவசாயிகளுக்கு ரூ. 10,000 தள்ளுபடி.
ரூ. 80.001- ரூ. 90,000 வரை கடன் பெற்றிருந்தால்,
குறு விவசாயிகளுக்கு ரூ. 10,000 தள்ளுபடி
சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி.
ரூ. 90,001- ரூ. 1,00,000 வரை கடன் பெற்றிருந்தால்,
குறு விவசாயிகளுக்கு ரூ. 10,000 தள்ளுபடி
சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி.
ரூ. 1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றிருந்தால்,
குறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி
சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி.
மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.
இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Crop Loan Waiver Chief Minister Vijay announced
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டுறவு பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா!

விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000! வேளாண் கடன் தள்ளுபடி!








