குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன்

பெட்ரோல் டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

News image

திருமாவளவன் - கோப்புப்படம்

Updated On :26 மே 2026, 2:49 am IST

பெட்ரோல் டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல் டீசல் விலையை நான்காவது முறையாக மத்திய பாஜக அரசு உயா்த்தியுள்ளது. ஒரே நாளில் லிட்டருக்கு ரூ. 3 உயா்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஈரான் இடையே ஓா் ஒப்பந்தம் ஏற்படவுள்ள நிலையில், ஹோா்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எந்தவித நியாயமோ இல்லாமல் விலையை உயா்த்துவது ஏற்புடையது அல்ல. இந்த விலை உயா்வு மக்கள் மீது சுமத்தப்படும் சுமையேயாகும். எனவே, இந்த விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

மற்றொரு அறிக்கை: கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிா்ச்சியை அளிக்கிறது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வண்டிப்பாளையத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிறாா் என்கிற செய்தி வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற வன்கொடுமைகள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட இவ்விரு சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.