எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை! தில்லியிலிருந்து புறப்பட்டார் முதல்வர் விஜய்! காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

கருப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

கருப்பூர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2026, 12:05 pm IST

பிரசித்தி பெற்ற கருப்பூர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கருப்பூர்  கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் பிரசித்தி பெற்ற இந்த ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயத்தில் கடந்த சில ஆண்டுகளாகக் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று முடிவுற்றது.  அதனைத் தொடர்ந்து கடந்த 26-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று காலை நான்காம் கால பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. 

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேள, தாளங்களுடன் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர் உள்ளிட்ட  தெய்வங்களின் கோபுர கலசத்திற்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

Summary

The Maha Kumbabhishekam (Grand Consecration Ceremony) of the renowned Karuppur Sri Mariamman Temple was held. A large gathering of devotees participated in the event and offered worship to the deity.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.