அரசுமுறைப் பயணம் காரணமாகவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முதல்வர் ச. ஜோசப் விஜய் சந்திக்கவில்லை என திலக் எம்.பி. கூறியுள்ளார்.
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் குறித்து செய்தியாளர்களுடன் காங்கிரஸ் எம்.பி. திலக் பேசியதாவது, "தில்லி பயணத்தை முழுமையாக அரசுமுறைப் பயணமாக வைத்திருக்க முதல்வர் விஜய் முடிவு செய்திருக்கலாம். அடுத்த முறை மீண்டும் ஜூன் 11-ல் விஜய் தில்லி வருகிறார். அப்போது, சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் கண்டிப்பாக விஜய் சந்திப்பார்.
மேலும், கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும் இப்போது இங்கு (தில்லி) வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஜார்க்கண்டின் மாநிலங்களவை எம்.பி.க்கள் தொடர்பான பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் முதல்வர் விஜய்யுடன் பேச முடியாத காரணமாகவும் இருக்கலாம்.
மேலும், ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சிலைத் திறப்பு நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
Summary
Why Did CM Vijay Not Meet Congress Leader Rahul Gandhi?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடரும் எதிர்ப்பு... கருப்பு உடையில் நாடாளுமன்றம் வந்த ராகுல், காங்கிரஸ் எம்.பி.க்கள்!

தில்லியில் பிரதமர் இல்லம் முன் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது - புகைப்படங்கள்

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது! - 16 ஆண்டுகளுக்கு முன் இதை எதற்காகச் சொன்னார் விஜய்?

ரயில் கூட்ட நெரிசலில் சிக்கி இளைஞர் பலி? ராகுல் குற்றச்சாட்டுக்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



