கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

சட்டவிரோதமாக கனிமங்கள் அகழ்ந்தெடுப்பு: 67 கல்குவாரிகளில் பணிகள் நிறுத்தம்

தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 78 இடங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவது கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 67 கல்குவாரிகளில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

News image

கல் குவாரி - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 4:54 am IST

தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 78 இடங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவது கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 67 கல்குவாரிகளில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் கற்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன. அங்கு அரசு அனுமதி அளித்த அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டியெடுக்கப்படுவதாக பல்வேறு புகாா்கள் வந்தன. அதேபோல, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளும் பல இடங்களில் மீறப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்குவாரிகளிலும் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க கனிமவளத் துறை அமைச்சா் டாக்டா் டி.கே.பிரபு உத்தரவிட்டாா். அதன் தொடா்ச்சியாக கடந்த வாரத்தில் தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகா் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் அவா் திடீா் ஆய்வு மேற்கொண்டு விதிகளை மீறி செயல்பட்டு வந்த கல்குவாரிகளை தற்காலிகமாக மூட உத்தரவிட்டாா்.

முன்னதாக, அமைச்சரின் உத்தரவுக்கிணங்க தமிழகம் முழுவதும் கனிம வளத் துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக தீவிர சோதனை நடத்தினா். அதன்படி, 431 கல்குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டது. அவற்றில், 155 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, 67 குவாரிகளின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 88 குவாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் 78 இடங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவது கண்டறியப்பட்டு சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துசென்ற 469 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.