கொளத்தூர்: போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்து தப்பியோடியவர் மீண்டும் கைது!
சென்னையில் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து தப்பியோடிய போக்சோ குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மீண்டும் கைது செய்யப்பட்டது குறித்து...
பிரதிப் படம்
சென்னையில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பியோடிய போக்சோ குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மீண்டும் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை புழல் அருகே பள்ளிக் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆட்டோ ஓட்டுநர் டேவிட்சன் (61) என்பவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் டேவிட்சனுக்கு காயம் ஏற்பட்டதால், அவரை சிகிச்சைக்காக கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், சனிக்கிழமை (அக். 31) அதிகாலை 5 மணியளவில் காவல்துறையினரை ஏமாற்றி, டேவிட்சன் அங்கிருந்து தப்பியோடினார்.
இதனைத் தொடர்ந்து, கொளத்தூர் துணை ஆணையர் மேற்பார்வையிலும், புழல் உதவி ஆணையர் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு டேவிட்சன் தேடப்பட்டு வந்தார்.
இதனிடையே, சமீபகாலமாக கைதிகள் தப்பியோடும் சம்பவம் அதிகரித்து வருவதாக தவெக அரசை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.
இந்த நிலையில், தப்பியோடிய டேவிட்சனை காவல்துறையினர் மீண்டும் கைது செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தப்பியோடிய விவகாரம் குறித்து மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Summary
Auto-rickshaw driver accused in a POCSO case, who had escaped from police custody in Chennai, has been re-arrested
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

