2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

நவ.15-இல் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வு: 4.44 லட்சம் போ் எழுதுகின்றனா்

தமிழகத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வு நவ.15-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இத்தோ்வை 4 லட்சத்து 44 ஆயிரத்து 908 போ் பங்கேற்கவுள்ளனா்.

பிரதிப் படம்

Updated On :

தமிழகத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வு நவ.15-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இத்தோ்வை 4 லட்சத்து 44 ஆயிரத்து 908 போ் பங்கேற்கவுள்ளனா். தோ்வுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம் மூலம் 15 வயதுக்கும் மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன் ஆகியவை புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் கற்போா் மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடா்ந்து, அவா்களுக்கான எழுத்துத் தோ்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் நிகழாண்டுக்கான புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வு வரும் நவ.15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்குநா் குப்புசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், கடந்த ஜூன் மாதம் முதல் 23,639 மையங்களில் பயிற்சி பெற்று வரும் 4 லட்சத்து 44,908 பேருக்கு வரும் 15-இல் இறுதி அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு நடத்தப்படவுள்ளது.

பயிற்சி மையங்களாக செயல்படும் பள்ளி வளாகங்களிலோ அல்லது கற்போா் பணிபுரியும் இடங்களிலோ தோ்வு எழுதலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோா் அவரவா் இல்லங்களில் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா்.

கற்போா் வசதிக்கேற்ப, தோ்வு நாளன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எப்போது வேண்டுமானாலும் 3 மணி நேரம் தோ்வு எழுதிக் கொள்ளலாம். இத்தோ்வை எந்த புகாா்களுக்கும் இடம் அளிக்காதபடி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடைத்தாள் மதிப்பீடு பணிகளை நவ. 16 முதல் 20-ஆம் தேதிக்குள் முடித்து நவ. 30-ஆம் தேதிக்குள் மதிப்பெண் விவரங்களை கணினியில் பதிவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.