சென்னை - பெங்களூர் 70 நிமிடத்தில்! புதிய 2 அதிவேக ரயில்தடங்கள் பற்றி!
பெங்களூ- ஹைதராபாத் 2 மணி நேரத்தில், சென்னை 70 நிமிடத்தில் பயணிக்கும் வகையில் புதிய 2 அதிவேக ரயில்தடங்களுக்கு அனுமதி

அதிவேக ரயில் - ANI
தென்னிந்திய நகரங்கள், மிக விரைவான ரயில் சேவையைப் பெறும் வகையில், பெங்களூரு நகரை சென்னை மற்றும் ஹைதராபாத்துடன் இணைக்கும் மிக முக்கிய அதி விரைவு ரயில் தடங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அனுமதி அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் சேவை துவக்க விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அனுமதி வழங்கப்பட்டுள்ள இரு வழித்தடங்களிலும் எதிர்பார்க்கப்படும் பயண நேரம் குறித்தும், தென்னிந்தியா முழுவதும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதில் அதிவேக இரயில்களின் பங்கு குறித்தும் விளக்கிப் பேசியிருந்தார்.
இந்த புதிய வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும்போது பெங்களூர் - சென்னை இடையேயான பயண நேரத்தை வெறும் 73 நிமிடங்களாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதுபோல, பெங்களூர் - ஹைதராபாத் இடையிலான பயண நேரம் சுமார் 2 மணி நேரம் 10 நிமிடங்களாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறருது.
இந்த புதிய வழித்தடங்கள் மூலம், தென்னிந்திய நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் வெகுவாகக் குறைவதுடன், இந்நகரங்களுக்கு இடையே பயணிக்கும் தொழில் முனைவோர், பணிநிமித்தமாக செல்வோர் மிகுந்த பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2026 - 27 பொது பட்ஜெட்டில், நாடு முழுவதும் இவ்விரு அதிவேக ரயில் சேவை உள்பட 7 வழித்தடங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Bengaluru to Chennai in 70 minutes! About the 2 new high-speed rail corridors!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

