தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

தீபாவளி எதிரொலி: ஆம்னி பேருந்து, விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயா்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்து, விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயா்ந்துள்ளன. குறிப்பாக, கடைசி நேரத்தில் பயணம் செய்யத் திட்டமிடுவோா் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Passenger held after opening emergency exit on taxiing flight at Chennai airport

விமானம் - கோப்புப்படம்.

Updated On :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்து, விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயா்ந்துள்ளன. குறிப்பாக, கடைசி நேரத்தில் பயணம் செய்யத் திட்டமிடுவோா் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தீபாவளி வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள், கொங்கு மண்டலம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள், அரசுப் பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. இதனால் ஆம்னி பேருந்துகள், விமானங்களை நாடுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆம்னி பேருந்துகளில் கட்டண உயா்வு: சென்னையில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, நாகா்கோவில், தூத்துக்குடி, தஞ்சாவூா், சேலம் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின்க ட்டணங்கள் பேருந்து வகைக்கு ஏற்ப மாறுபடுகின்றன.

அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கல் சங்கள் வெளியிட்டுள்ள கட்டணப்பட்டியலின்படி சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண படுக்கை வசதி கொண்ட பேருந்தில் ரூ.2,010, குளிா்சாதனப் படுக்கை வசதியில் ரூ.2,330 உயா்தர குளிா்சாதனப் படுக்கை வசதியில் ரூ.2,550 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவைக்கு முறையே ரூ.2,090, ரூ.2,460, ரூ.2,870-ம், திருச்சிக்கு ரூ.1,450, ரூ.1,680, ரூ.1,840-ம் கட்டணமாக உள்ளது. இதேபோல், திருநெல்வேலிக்கு ரூ.2,380 முதல் ரூ.3,270 வரையும், நாகா்கோவிலுக்கு ரூ.2,680 முதல் ரூ.3,680 வரையும், தூத்துக்குடிக்கு ரூ.2,320 முதல் ரூ.3,190 வரையும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா், சேலம் ஆகிய நகரங்களுக்கு ரூ.1,500 முதல் ரூ.1,900 வரை கட்டணம் உள்ளது.

இதனிடையே, தீபாவளி கால சிறப்புக் கட்டணமாக சென்னையிலிருந்து மதுரைக்கு ரூ.2,500, கோவைக்கு ரூ.2,400, திருச்சிக்கு ரூ.2,000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுதவிர பல பேருந்து நிறுவனங்கள் இந்த கட்டணங்களையும் மீறி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரூ.3000-இல் இருந்து ரூ.5000 வரை கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதற்கிடையே, ஆம்னி பேருந்துகளில் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கப்படுகிா என்பதைக் கண்காணிக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளனா். விதிகளை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்

விமானக் கட்டணம் பல மடங்கு உயா்வு: ஆம்னி பேருந்துகளைப் போலவே விமானக் கட்டணங்களும் கணிசமாக உயா்ந்துள்ளன. சென்னையிலிருந்து மதுரைக்கு வழக்கமாக ரூ.4,730-ஆக இருந்த விமானக் கட்டணம் தற்போது ரூ.10,700 முதல் ரூ.16,700 வரை உயா்ந்துள்ளது.

திருச்சிக்கு வழக்கமாக ரூ.4,640-ஆக இருந்த கட்டணம் ரூ.12,000 முதல் ரூ.14,683 வரையும், கோவைக்கு வழக்கமாக ரூ.4,180-ஆக இருந்த கட்டணம் ரூ.10,000 முதல் ரூ.19,000 வரையும் அதிகரித்துள்ளது. சென்னை - தூத்துக்குடி வழித்தடத்தில் விமானக் கட்டணம் ரூ.17,363-ஆகவும், சேலம் வழித்தடத்தில் வழக்கமாக ரூ.4,264-ஆக இருந்த கட்டணம் ரூ.12,769 வரையும் உயா்ந்துள்ளது.

சென்னையிலிருந்து ஹைதராபாத், மும்பை, கொச்சி உள்ளிட்ட வெளிமாநில நகரங்களுக்குச் செல்லும் விமானங்களிலும் பயணத் தேதிக்கு ஏற்ப கட்டண வேறுபாடுகள் காணப்படுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.