அன்பில் மகேஸ் ஜாமீன் கோரிய மனு: விசாரணை நவ.17-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அன்பில் மகேஸ் ஜாமீன் கோரிய மனுவின் மீதான விசாரணை நவ.17-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதைப் பற்றி...
அன்பில் மகேஸ்.
முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன் கோரிய மனுவின் மீதான விசாரணை நவ.17-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 400 கோடி வரை முறைகேடாக பணம் வசூலித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்த வழக்கில் கடந்த அக். 6 ஆம் தேதி திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டார்.
அவரை, நவ.6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்கு, தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியகுமார், இந்தக் குற்றத்தில் அன்பில் மகேஸை தொடர்பு படுத்துவதற்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது. அவருக்கு பிணை வழங்க முடியாது எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, அவரது நீதிமன்றக் காவல் நவ.18 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரிய மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். அன்பில் மகேஸ் ஜாமீன் மனு மீது பதிலளிக்க நவ. 17 ஆம் தேதி வரை காவல்துறை அவகாசம் கேட்டதை அடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Summary
The Madras High Court has adjourned the hearing on the bail plea filed by former School Education Minister Anbil Mahesh to Nov.17.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

