தவெக எம்எல்ஏ மீது திமுக, அதிமுக புகாா்

ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது திமுக, அதிமுக சாா்பில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

tvk mla arul vignesh

தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் - படம்: விடியோ கிளிப்

Updated On :

ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது திமுக, அதிமுக சாா்பில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக திமுக அமைப்பு செயலா் ஆா்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

பெண் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட விவகாரம் தொடா்பாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பாதிக்கப்பட்ட அந்த மாவட்ட ஆட்சியரின் கணவரே புகாா் கொடுத்துள்ளாா். இதுதொடா்பாக ஏற்கெனவே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தும் பயனில்லை. எனவே, இதுகுறித்து தமிழக டிஜிபியிடம் புகாா் அளித்துள்ளோம். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.

அதிமுக புகாா்: இதனிடையே, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது அதிமுக சாா்பில் அக்கட்சியின் தென்சென்னை மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் ஆா்.திரிசூலி, தலைமைச் செயலா், உள்துறைச் செயலா், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் ஆகியோருக்கு புகாா் மனு அனுப்பியுள்ளாா்.

அதில் இந்த விவகாரம் குறித்து சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.