அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, ரெயின்கோட், ஸ்வெட்டர்! டெண்டர்கள் வெளியீடு!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, ரெயின்கோட், ஸ்வெட்டர் வழங்க டெண்டர்கள் வெளியிடப்பட்டது பற்றி...

சித்திரிப்பு படம் - Photo: Gemini AI | Dinamani
தமிழ்நாட்டில் 2027 - 28 கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஷூ, சாக்ஸ், ரெயின்கோட், ஸ்வெட்டர் உள்ளிட்டவை வழங்குவதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஷூ, சாக்ஸ், ரெயின்கோட் மற்றும் ஸ்வெட்டர் உள்ளிட்டவை கொள்முதல் செய்வதற்காக ஒரே நாளில் 4 டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பாக ரூ. 52.05 கோடி மதிப்பிலான டெண்கர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஷூ வழங்குவதற்காக ரூ. 37.24 கோடி மதிப்பில் முதல் டெண்டரும், சாக்ஸ் வழங்குவதற்காக ரூ. 9.7 கோடி மதிப்பில் இரண்டாவது டெண்டரும் வெளியிடப்பட்டுள்ளன.
மலைப்பகுதி மாணவர்களுக்கு ரெயின்கோட், ஸ்வெட்டர்
கோவை, நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மழைக்காலங்களிலும், குளிர்க்காலங்களிலும் சிரமமின்றி பள்ளிகளுக்கு சென்றுவருவதற்கு ரெயின்கோட் மற்றும் ஸ்வெட்டர் வழங்கப்படவுள்ளன.
28, 30, 32 மற்றும் 34 இன்ச் அளவுகளில் மொத்தம் 91,771 ரெயின்கோட்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ. 3.32 கோடி மதிப்பில் மூன்றாவது டெண்டரும், கம்பளி ஸ்வெட்டர் கொள்முதல் செய்வதற்கு ரூ. 2.42 கோடி மதிப்பில் நான்காவது டெண்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
2027 - 28 கல்வியாண்டில் உரிய காலகட்டத்துக்குள் மாணவர்களுக்கு பொருள்களை வழங்குவதற்காக முன்கூட்டியே டெண்டர்கள் விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Shoes, raincoats, and sweaters for government school students! Tenders issued!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

