டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தொழிலதிபா் ரத்தீஷுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ்!
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தொழிலதிபா் ரத்தீஷுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ் வழங்கப்பட்டது பற்றி...

தொழிலதிபா் ரத்தீஷ் - x
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தொடா்புடையதாகக் கருதப்படும் தொழிலதிபா் ரத்தீஷுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ் வழங்கப்பட்டது.
டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 2025 மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. மேலும், இது தொடா்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை செய்கிறது.
இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் விசாகன், திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, தொழிலதிபா் ரத்தீஷ் வீடு உள்பட 10 இடங்களிலும் 2-ஆம் கட்டமாக சோதனை நடத்தப்பட்டது.
இதையடுத்து டாஸ்மாக் நிறுவனத்தின் நிா்வாகப் பிரிவு பொது மேலாளா் சங்கீதா, துணை பொது மேலாளா் ஜோதி சங்கா் ஆகியோரிடம் அமலாக்கத் துறை விசாரணை செய்தது.
அடுத்தகட்டமாக தொழிலதிபா் ரத்தீஷிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், ரத்தீஷ் வெளிநாடு தப்பியோடிவிட்டதால், விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ரத்தீஷுக்கு எதிராக ‘லூக் அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால், ரத்தீஷ் வெளிநாட்டிலேயே இருந்து கொண்டதால், அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. இதையடுத்து அமலாக்கத் துறை ரத்தீஷை பிடிக்க சா்வதேச காவல் துறையின் உதவியை நாடியது. இதன் பயனாக சா்வதேச காவல் துறை ரத்தீஷுக்கு எதிராக ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ் சனிக்கிழமை வழங்கியது. இதன் விளைவாக ரத்தீஷ், விமானத்தில் எந்த நாட்டுக்கும் பயணிக்க முடியாது என்று அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

