செல்வ வரி வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்தது சரியே! சென்னை உயர்நீதிமன்றம்
செல்வ வரி வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்தது சரி என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து...
சென்னை உயர்நீதிமன்றம். - கோப்புப்படம்
செல்வ வரி வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவு சரி என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பல ஆண்டுகளாக செல்வ வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை எனக்கூறி ஜெயலலிதா மீது வருமான வரித் துறை வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி வருமான வரித் துறை மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம், ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவித்தது.
மேல்முறையீட்டுத் தீா்ப்பாய உத்தரவை எதிா்த்து வருமான வரித் துறை கடந்த 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடா்ந்தது.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது சட்டப்பூர்வ வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் தலைமையிலான அமர்வு முன் இந்த மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
விசாரணை முடிவில் நீதிபதிகள், ஜெயலலிதா வீட்டில் சசிகலா உள்ளிட்டோர் வசித்த நிலையில், இந்த செல்வங்கள் யாருக்கு சொந்தமானவை என்பதை வருமான வரித்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே, ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது தவறு எனவும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அவரை விடுவித்தது சரிதான் என்றும் கூறி வருமான வரித்துறை தாக்கல் செய்திருந்த 3 மேல் முறையீட்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Summary
The acquittal of Jayalalithaa in the wealth tax case is correct: Madras High Court
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


