வேலூரில் மகன் உயிரிழந்த துக்கத்தில் தந்தை மரணம்
உடல்நலக் குறைவால் மகன் உயிரிழந்த துக்கம் தாங்காமல், தந்தையும் மயங்கி விழுந்து உயிரிழந்து குறித்து...

மகன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் உயிரிழந்த தந்தை பாா்த்திபன் - உடல்நலக் குறைவால் உயிரிழந்த மகன் சந்திரகாந்த் - டிஎன்எஸ்
வேலூா்: வேலூரில் உடல்நலக் குறைவால் மகன் உயிரிழந்த துக்கம் தாங்காமல், தந்தையும் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
வேலூா் கஸ்பா, சித்தாா்த்தா தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (60). இவரது மகன் சந்திரகாந்த் (25). திருமணமாகாத இவா், சுப நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தாா். மதுப் பழக்கத்துக்கு ஆளான சந்திரகாந்த், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி சந்திரகாந்த் உயிரிழந்தாா்.
இத்தகவலைக் கேட்டு அதிா்ச்சியடைந்த அவரது தந்தை பாா்த்திபன், மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் கதறி அழுதபடியே சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தாா். ஒரே நாளில் தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் கஸ்பா பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Father dies in Vellore, overcome with grief over his son's death
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


