ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்த பயணிகள்! ஒருவர் பலி!திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து! 92,000 விவசாயிகள், ஆசிரியர்கள் விடுவிப்பு!அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும்? வெளியான அதிர்ச்சித் தகவல்!கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு நவ. 16 வரை நீதிமன்றக் காவல்! ஐசிசி தலைவராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு!ஜார்க்கண்ட் நிலக்கரிச் சுரங்கம்!அபாயத்தில் 6 லட்சம் மரங்களும் யானைகள் வாழ்விடமும்!!மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!குற்றவாளிகளின் ‘ஹோல்சேல்’ கூடாரமாக தவெக! மு.க. ஸ்டாலின்மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கு: நிஷாந்த் கைது

ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!

ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவித்திருப்பது பற்றி...

aadhav daisy

ஆதவ் அர்ஜுனா - டெய்சி மார்ட்டின் - Instagram

Updated On :

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக அவரது மனைவியும் தொழிலதிபருமான டெய்சி மார்ட்டின் அறிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் ஆகியோரின் மகளான டெய்சி மார்ட்டினை ஆதவ் அர்ஜுனா திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில், திருமணம் செய்து 14 ஆண்டுகளாகும் நிலையில், தனது கணவரைப் பிரிவதாக டெய்சி மார்ட்டின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் டெய்சி மார்ட்டின் தெரிவித்திருப்பதாவது:

“கடந்த 14 ஆண்டுகளாக வாழ்க்கையில் இணைந்து பயணித்த நாங்கள், அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த பல கட்டங்களைக் கடந்து வந்துள்ளோம். நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணைகளாகவும், பெற்றோர்களாகவும் இணைந்து வாழ்க்கையின் பல்வேறு அத்தியாயங்களைக் கடந்து வந்துள்ளோம்.

இன்று, ஆதவ் அர்ஜுனாவும் நானும் ஒரு தம்பதியாகப் பிரிந்து, தனித்தனிப் பாதைகளில் பயணிக்க வேண்டும் என்று பரஸ்பரம் முடிவெடுத்துள்ளோம். இது எங்கள் இருவருக்கும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருந்தாலும், எங்கள் குழந்தையை இணைந்து வளர்ப்பதிலும், குழந்தையின் மகிழ்ச்சியையும் நலனையும் உறுதி செய்வதிலும் நாங்கள் தொடர்ந்து மிகுந்த முன்னுரிமை அளிப்போம்.

ஆதவ் அர்ஜுனாவின் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் அவருக்கு மகிழ்ச்சியும், அமைதியும், வெற்றியும் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன்.

வாழ்க்கையின் இந்த மாற்றமான காலகட்டத்தில், உங்கள் புரிதலையும், கனிவையும், எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளித்து ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏரீஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள டெய்சி மார்ட்டின், கடந்த சில ஆண்டுகளாக கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதை தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Story image

Summary

Daisy Martin announces her separation from Aadhav Arjuna!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.