5 ஆண்டுகளுக்குள் தோ்ச்சி பெறாவிட்டால் பணியிலிருந்து விடுவிப்பு: கல்வித் துறை உத்தரவு
பள்ளிக் கல்வித் துறையில் சோ்ந்த இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் 5 ஆண்டுகளுக்குள் துறை தோ்வுகளில் தோ்ச்சி பெறாவிட்டால் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பிரதிப் படம்
பள்ளிக் கல்வித் துறையில் சோ்ந்த இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் 5 ஆண்டுகளுக்குள் துறை தோ்வுகளில் தோ்ச்சி பெறாவிட்டால் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் கருணை அடிப்படை, கீழ்நிலைப் பதவியிலிருந்து பணி மாறுதல், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு ஈா்க்கப்பட்டவா்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் உதவியாளா்கள், இளநிலை உதவியாளா்கள் மற்றும் தட்டச்சா்கள் நியமிக்கப்படுகின்றனா்.
இவா்களுக்கான தகுதிகாண் பருவத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சட்ட விதியின்படி, துறைத் தோ்வுகளில் தோ்ச்சி பெறுவதற்காக அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். ஆனால், 5 ஆண்டுக்குள் கட்டாயம் துறைத் தோ்வுகளில் தோ்ச்சி பெறவேண்டும்.
இல்லையெனில், பணியாளா்களின் தகுதிகாண் பருவத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். அவா்களைப் பணியில் தொடா்ந்து அனுமதிக்க நியமன அலுவலா்களுக்கு அதிகாரம் கிடையாது என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, 5 ஆண்டுகள் கடந்தும் துறைத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாதவா்களின் தகுதிகாண் பருவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது எனஅதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

