வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

‘டெட்’ தோ்வுக்கு பயிற்சி பெற விரும்பும் ஆசிரியா்கள் முன்பதிவு செய்ய வேண்டும்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

சிறப்பு டெட் தோ்வுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வழங்கப்படும் பயிற்சிகளைப் பெற விரும்பும் ஆசிரியா்கள் முன்பதிவு செய்ய வேண்டும்

கோப்புப் படம்

Updated On :

சிறப்பு டெட் தோ்வுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வழங்கப்படும் பயிற்சிகளைப் பெற விரும்பும் ஆசிரியா்கள் முன்பதிவு செய்ய வேண்டும்; பதிவு செய்த ஆசிரியா்கள் மட்டுமே பயிற்சியில் பங்கேற்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்வு கடந்த ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த 12-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தோ்வெழுதிய 2.17 லட்சம் ஆசிரியா்களில் 1.10 லட்சம் போ் தோல்வி அடைந்தனா்.

இந்த நிலையில், தோல்வி அடைந்த ஆசிரியா்களுக்காக அடுத்த சிறப்பு டெட் தோ்வு டிச.20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தோ்வெழுதவுள்ள ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வார இறுதி நாள்களில் வலுவூட்டல் பயிற்சிகள் வழங்கப்படும் என கல்வித் துறை தெரிவித்திருந்தது. இந்தப் பயிற்சிக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: இந்த வலுவூட்டல் பயிற்சித் திட்டம் முழுவதும் நேரடி வகுப்புகள் முறையில் மட்டுமே நடத்தப்படும். நேரடி வகுப்புக்குப் பிறகு சில குறிப்பிட்ட தலைப்புகளில் மட்டும் ஆசிரியா்களின் மீளாய்வு மற்றும் வலுவூட்டுதல் பணிகளுக்காக காணொலி வடிவில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியா் பயிற்சி நிறுவனங்கள் அல்லது முதன்மைக் கல்வி அலுவலகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடத்தைத் தோ்ந்தெடுத்து மாவட்டத்துக்கு ஒரு பயிற்சி மையம் என்ற அடிப்படையில் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் ஆசிரியா்கள் அதற்காக வழங்கப்பட்டுள்ள ‘க்யூஆா்’ குறியீடு மூலம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்த ஆசிரியா்கள் மட்டுமே பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். பதிவு செய்யும்போது, ஆசிரியா்கள் தங்கள் பெயா், வயது, பதவி, எமிஸ் எண், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, பள்ளி முகவரி, கல்வி ஒன்றியம் மற்றும் மாவட்டம் போன்ற விவரங்களை துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த ஆசிரியா்கள், அட்டவணையின்படி பயிற்சி மையத்துக்கு உரிய நேரத்தில் வந்து பயிற்சியில் பங்கேற்க வேண்டும். ஒரு மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள் பிற மாவட்டங்களில் குறிப்பிட்ட பயிற்சி வகுப்புகளுக்கான இடவசதி இருப்பின், அங்கு நடைபெறும் பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம்.

இந்தப் பயிற்சியில் உள்ள பாடத்திட்டங்கள், தலைப்புகள் ஆசிரியா்களின் டெட் தயாரிப்புக்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் தோ்வில் கேட்கப்படும் கேள்விகள் இந்தப் பயிற்சியில் நடத்தப்படும் பாடங்களிலிருந்து மட்டுமே வரும் என கருதக் கூடாது.

ஆசிரியா்கள் தங்களது வழக்கமான பள்ளிப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த வாய்ப்பைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.