சென்னைக்கு நாளை விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை வாபஸ்!

நவ. 18-ல் சென்னைக்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக..

heavy rain

ஆரஞ்சு எச்சரிக்கை - file photo

Updated On :

சென்னைக்கு நவ. 18-ஆம் தேதி விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று, நவம்பர் 16 மாலை அக்வான் புயலாக உருவாகியுள்ளது.

இதன் காரணமாக, நவ. 18, 19 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த எச்சரிக்கையை தற்போது திரும்பப் பெற்றுள்ளது.

நவம்பர் 18-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்பட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள்(நவம்பர் 19) சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.