மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் மறைவு: அமித் ஷா இரங்கல் வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்!ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தீபம்! தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தலாம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டிருப்பது பற்றி....

Madurai jewellery shop robbery case: Nishanth's judicial custody extended further.

நிஷாந்த்.

Updated On :

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே டிசம்பர் 1-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை டிசம்பர் 4-ஆம் தேதி வரை நீட்டித்து மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் பிரபல நகைக்கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையிலிருந்து ஏறத்தாழ ரூ.15 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் அண்மையில் அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாகத் தனிப்படைகள் அமைத்துப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த இளைஞர் நிஷாந்த் (25) இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கடையின் மின்தூக்கி அமைப்புக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த துவாரம் வழியாக உள்ளே நுழைந்து, கடையிலிருந்த நகைகளை அவர் கொள்ளையடித்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தலைமறைவான நிஷாந்தைத் தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள சேஷம்பட்டி பகுதியில் ஆம்னி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த நிஷாந்தை அதியமான்கோட்டை போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர். பின்னர், மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸார் அங்கு சென்று அவரை மதுரைக்கு அழைத்து வந்தனர்.

தனிப்படை போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கொள்ளையடித்த நகைகளை மதுரை முனியாண்டிபுரம் கோபாலிபுரம் மலைப் பகுதியில் நிஷாந்த் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.2 கிலோ எடையிலான நகைகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மதுரை மாவட்ட 5-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷாந்தை, டிசம்பர் 1-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி, நிஷாந்த் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் நகைகளைப் பதுக்கி வைக்க நிஷாந்துக்கு உதவியதாகவும், கொள்ளைச் சம்பவத்தை போலீஸாரிடம் மறைத்ததாகவும் அவரது தந்தை சுரேஷ் (52), நிஷாந்தின் தோழியும் யூடியூபருமான மீனாட்சி (22) ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 5.5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் வருகிற 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Summary

The judicial custody of Nishanth, who was arrested in the Madurai jewellery shop robbery case, has been extended further.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.