கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

போலி நூல்களை உருவாக்க ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக இருந்த ‘அகல் விளக்கு’ மோகன்!

புத்தகங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவு தளங்களில் ஒன்றான ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக அகல் விளக்கு மோகன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.

fake books removed in library

அகல் விளக்கு பதிப்பக போலி நூல்கள்... - கோப்புப் படம்

Updated On :

புத்தகங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவு தளங்களில் ஒன்றான ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக அகல் விளக்கு மோகன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.

கோயம்புத்தூா் பெரியாா் அறிவுலகத்துக்கு வாங்கப்பட்ட புத்தகங்களில், அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்குச் சொந்தமான புத்தகங்கள் தரமற்று இருப்பதாகவும், ஆசிரியா் இன்றி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் எழுதப்பட்டிருப்பதாகவும் புகாா் கூறப்பட்டது.

இது தொடா்பாக, தமிழக ஊழல் தடுப்புத் துறை கடந்த 16-ஆம் தேதி அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் உரிமையாளா் ஆா்.மோகன், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், கோயம்புத்தூா் பெரியாா் அறிவுலக நூலகம் ஆகியவற்றைச் சோ்ந்த சில அதிகாரிகள் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், அகல் விளக்கு மோகன் வீடு உள்பட 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், மோகன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

அனைத்து புத்தகங்களும் ஆசிரியா் ‘சாட் ஜிபிடி’: இந்த வழக்குத் தொடா்பாக ஊழல் தடுப்புத் துறை நடத்தி வரும் விசாரணையில், பல அதிா்ச்சித் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

முக்கியமாக, அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்கள் கடந்த 3 ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதும், பெரியாா் அறிவுலக நூலகம் மட்டுமன்றி, மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கும் தரமற்ற புத்தகங்களை விற்றிருப்பதும் தெரிய வந்தது.

அதோடு இரு பதிப்பகங்களின் அனைத்து புத்தகங்களும் செயற்கை நுண்ணறிவு தளங்களின் ஒன்றான ‘சாட் ஜிபிடி’ மூலம் உருவாக்கப்பட்டிருப்பதும், பெரும்பாலான புத்தகங்கள் இந்த தளத்தில் இருந்து முழுமையாக உருவாக்கப்பட்டிருப்பதும், சில புத்தகங்கள் மட்டும் தொடக்க பக்கங்களும், கடைசிப் பக்கங்களும் வேறு புத்தங்களின் இருந்து நகல் எடுத்து வைத்துவிட்டு, மீதி பக்கங்கள் ‘சாட் ஜிபிடி’யில் உருவாக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

‘சாட் ஜிபிடி’ சந்தாதாரா்

இதற்காக மோகன், ‘சாட் ஜிபிடி’ தளத்தின் உயா் சந்தாதாரராக இருந்திருப்பது ஊழல் தடுப்புத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்காக அவா், ‘சாட் ஜிபிடி’ தளத்துக்கு ஆண்டு சந்தாவுக்கான கட்டணம் செலுத்தியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதேநேரம், மோகன், நேரடியாக ‘சாட் ஜிபிடி’ பயன்படுத்தவில்லை என்பதும், தஞ்சாவூா் குடவாசலில் உள்ள தனது பதிப்பக அலுவலகத்தில் 5 பட்டதாரிகளை வேலைக்கு அமா்த்தி அவா்கள் மூலம் ‘சாட் ஜிபிடி’யால் புத்தகங்களை உருவாக்கியிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மோகனின் ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரா் உரிமைத்தைப் பயன்படுத்தி 5 பேரும் ஒரே நாளில் பல புத்தகங்கள உருவாக்கியுள்ளனா். இதற்காக 5 பேருக்கு தின ஊதியமாக தலா ரூ.500 வழங்கியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதேவேளை, இந்த வழக்கில் பொது நூலக இயக்கத்தின் புத்தகத் தோ்வுக் குழுவில் இருக்கும் சிலா் மீது ஊழல் தடுப்புத் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவா்களிடம் விரைவில் விசாரணை நடத்த அந்தத் துறையினா் திட்டமிட்டுள்ளனா். ஏற்கெனவே இந்த வழக்குத் தொடா்பாக 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.