யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்! எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்து!ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!மதுரையில் 144 தடை! ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

பெண்களின் பாதுகாப்பைவிட தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியமா? கனிமொழி

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் கனிமொழி கருத்து...

Kanimozhi

கனிமொழி - கோப்புப் படம்

Updated On :

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருக்கும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சிப்பதுடன் தவெக எம்எல்ஏவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,

"தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியானபோதே, இதுகுறித்து விசாரித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

அன்று என்னையும், பிற அரசியல் தலைவர்களையும், தி.மு.க.வையும் கேள்வி கேட்டவர்களும், பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதைக்கூட அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டியவர்களும் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்?

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்து, பணியிடங்களில் அத்துமீறல்களைச் சகித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன். இத்தனை நாட்களாகியும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் விஜய் இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பெண்களின் பாதுகாப்பைவிட, இத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்வாரா?

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Is protecting a member of her own party more important than the safety of women: Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.