ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 1 கோடி நிலம் விற்பனை: தம்பதி உள்பட 3 பேர் கைது!
ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 1 கோடி நிலம் விற்பனை செய்த வழக்கில் தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி..

குமார், அவரது மனைவி உஷா மற்றும் வெற்றிவேல்.
ஆவடி அருகே வெள்ளானூரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1 கோடியிலான நிலத்தை விற்பனை செய்த வழக்கில் தம்பதி உள்பட 3 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை மாலை கைது செய்தனர்.
சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சியாமளா (70). அவரது பெற்றோர் இறந்த நிலையில், அவரது அண்ணன் முரளி என்பவர், கடந்த 1990-ஆம் ஆண்டு ஆவடி அடுத்த வெள்ளானூர் பகுதியில் 2,621 சதுரடி நிலத்தை வாங்கி பயன்படுத்தி வந்தார்.
திருமணம் ஆகாத முரளி கடந்த 2023-ஆம் நவம்பர் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து, முரளியின் சொத்திற்கு சியாமளா வாரிசுதாரர் ஆனார். இந்த நிலையில் அண்மையில் சியாமளா, அவரது மருத்துவச் செலவிற்காக மேற்படி நிலத்தை விற்பனை செய்ய வில்லங்கச்சான்று போட்டு பார்த்தார். அப்போது, முரளி போல, ஆள்மாறாட்ட நபர் வாயிலாக கடந்த பிப்ரவரி மாதம் உஷா என்பவருக்கு நிலத்தை விற்பனை செய்தது தெரிந்தது.
மேலும் உஷா, அவரது கணவர் குமார் மற்றும் அவரது நண்பர்கள் வெற்றிவேல், ஜெயக்குமார், அசன் அலி ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் வாயிலாக நிலத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.
இது குறித்து சியமளா ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். காவல் ஆணையர் த. செந்தில்குமார் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் பாலன் தலைமையில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக ஆவடி தில்லை நகரைச் சேர்ந்த குமார் (35), அவரது மனைவி உஷா (30), ஆரிக்கம்பேடு மேட்டுத்தெருவைச் சேர்ந்த வெற்றிவேல் (42) ஆகிய 3 பேரை திங்கள்கிழமை (நவ.23) மாலை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸார் அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Summary
On Monday evening, the Avadi Central Crime Branch police arrested three individuals, including a married couple, in connection with a case involving the sale of land worth Rs. 1 crore in Vellanoor, near Avadi, using forged documents.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

