யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்! எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்து!ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!மதுரையில் 144 தடை! ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

தவெக எம்எல்ஏவைக் காப்பாற்றத்தான் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்கவில்லையா? உதயநிதி

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்திருக்கும் நிலையில் தவெக அரசு மீது உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்.

MK stalin - Udhayanidhi

முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :

மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தது தெரிந்தும் எம்எல்ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லையா? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்திருக்கும் நிலையில், தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள், இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாக்கத்தான் ஆட்சி நடத்துகிறாரா முதல்வர்?

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தியே அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய செய்தி.

இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதல்வருக்கு தெரியாதா?

அதை முதல்வரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்எல்ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லையா?

இதில் எது உண்மை என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதல்வர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதல்வர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும்.

அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்.

இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Udhayanidhi stalin on kallakurichi MLA case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.