இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வியாழக்கிழமை (நவ.26) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை - பிரதிப் படம்
தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வியாழக்கிழமை (நவ.26) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மன்னாா் வளைகுடா முதல் தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வியாழக்கிழமை (நவ.26) திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், நாமக்கல், கரூா், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சை, திருவாரூா், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
வெள்ளிக்கிழமை (நவ.27), நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, திருப்பூா், ஈரோடு, விழுப்புரம், கடலூா், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழைப் பொழிவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் குட்டம், வேலூா் ராஜாதோப்பு அணை, செங்கல்பட்டு மாவட்டம் லத்தூா் பகுதிகளில் 60 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம், காரைக்கால், கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணை பகுதிகளில் 50 மி.மீ. மழை பதிவானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

