‘அன்பும் - முத்தங்களும்’.. பிறந்த நாளையொட்டி பெற்றோரிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி!

பிறந்த நாளை ஒட்டி தந்தையும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றதைப் பற்றி...

தந்தையும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஆகியோரிடம் வாழ்த்துப் பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். - @Udhaystalin

Updated On :

பிறந்த நாளை ஒட்டி தந்தையும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார்.

திமுக இளைஞரணிச் செயலரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 27) 50-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், கட்சி தொண்டர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமான நபர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்த நாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து   திமுக சார்பில், உதயநிதியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு  நலத்திட்ட பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தன்னுடைய பிறந்த நாளையொட்டி தந்தையும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்காவை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பிறந்த நாளை முன்னிட்டு எந்நாளும் அன்போடு வழிநடத்தும் கழகத்தலைவர் - பாசமிகு அப்பாவிடமும் - அரவணைத்து ஊக்குவிக்கும் அம்மாவிடமும் இன்று காலை வாழ்த்துப் பெற்றேன். அம்மா - அப்பாவுக்கு அன்பும் - முத்தங்களும்!” எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் இலட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது.

கழத்தின் ரத்த நாளமாக நான் வளர்த்த இளைஞரணியின் கொள்கைப் பணியில் இனித் தேவை வேகமல்ல, பெரும் பாய்ச்சல்! உன்னுடைய பணியே உன்னைப் பற்றிச் சொல்லும். உழைப்பால் உயர்ந்திடு! இலட்சியப் பாதையில் முன்னேறு! கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு!” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

On the occasion of his birthday, Udhayanidhi Stalin, the Leader of the Opposition, sought the blessings of his father, DMK leader M.K. Stalin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.