பிறந்த நாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை!
தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை....
அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை - X
தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 27) மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தனது 50 ஆவது பிறந்த நாளையொட்டி உதயநிதி ஸ்டாலின், சென்னை மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வின்போது திமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் அவருடன் இருந்தனர்.
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
Summary
Udhayanidhi Stalin pays tribute at the memorials of Anna and Karunanidhi on his birthday
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

