தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

சிறுமி பாலியல் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி வீரமணி மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி போக்சோ வீரமணி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு...

veeramani

வீரமணி - கோப்புப் படம்

Updated On :

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிராக இதுவரை 9 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வீரமணி உள்ளிட்டோர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய ஒரு வழக்கில், சுமார் 720 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்த நிலையில், தனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி வீரமணி தரப்பில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், இந்த வழக்கு தொடர்பாக போலீஸார், எஸ்.சி., எஸ்.டி.,வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் இருந்து சுமார் நான்கரை ஆண்டுகள் கழித்தே, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸார் தரப்பில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் முரண்பாடுகள் உள்ளன. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரமும் இல்லை.

போலீஸார் உள்நோக்கத்துடன் தொடர்ந்துள்ள இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். பத்மா, இந்த மனுவுக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Summary

Veeramani plea to be discharged from a sexual offence case: Court orders police response

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.