‘தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிக்கும் திமுக முடிவு ஒரு வியூகம்தான்’ - ஜவாஹிருல்லா
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிக்கும் முடிவு திமுகவின் ஒரு வியூகம் தான் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

ஜவாஹிருல்லா - கோப்புப்படம்
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிக்கும் முடிவு திமுகவின் ஒரு வியூகம் தான் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடா்பாக திமுக எடுத்துள்ள நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவு நிலைப்பாடுக்கு மமக ஆதரவு அளிக்கிறது. திமுகவின் இந்த முடிவு ஒரு வியூகம்தான்.
இந்த மசோதாவை இப்போது நிறைவேற்றாவிடில், 2027-ஆம் ஆண்டில் அது நிறைவேற்றப்படும் ஆபத்து உள்ளது. இப்போது தொகுதி மறுசீரமைப்பு செய்யாமல் இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், 2027-இம் ஆண்டில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தன் விருப்பத்துக்கேற்ப தொகுதி மறுசீரமைப்பை செயல்படுத்திவிடும் என்ற அபாயம் உள்ளது.
இஸ்லாமிய வாக்காளா்கள் கணிசமாக உள்ள தற்போதைய தொகுதிகள் திட்டமிட்டுப் பிரிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஜோசப் குரியன் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அனைத்தும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.
கி.வீரமணி (தி.க.): தொகுதி மறுசீரமைப்பை தங்களுக்கு ஏற்ற வகையில் பாஜகவால் ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்ற ஆபத்தும் இதில் உள்ளது. அதைத் தடுக்க வேண்டும். திமுகவை பொருத்தவரை தமிழ்நாட்டின் நலன் பறிபோகக் கூடாது.
அதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று அறுதியிட்டு உறுதிப்படுத்தியுள்ளாா். திமுக முன்வைக்கும் திருத்தங்களை ஏற்றுக்கொண்டு, மசோதா முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே திமுக இதை ஆதரிக்க வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

