திருப்பரங்குன்றம்: மேள தாளங்கள் முழங்க பால்குடம் எடுத்து வந்த முருக பக்தர்கள்!
திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள பழனியாண்டவர் சுவாமிக்கு முருக பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தது பற்றி...

பால்குடம் எடுத்து வந்த முருக பக்தர்கள்... - DNS
திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள பழனியாண்டவர் சுவாமிக்கு முருக பக்தர்கள், மேள தாளங்கள் முழங்க பால்குடம் எடுத்து வந்தனர்.
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகளும் திருப்பரங்குன்றம் வருகை தந்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை முழுவதும் சிஆர்பிஎஃப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மேள தாளங்கள் முழங்க பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்... - DNS
இதனிடையே தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட உள்ளதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் இருந்து, மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள பழனியாண்டவர் சுவாமிக்கு முருக பக்தர்கள், மேள தாளங்கள் முழங்க பால்குடம் எடுத்து வந்தனர்.
Summary
Thiruparankundram: Devotees carry pots of milk amidst the resounding beats of drums and cymbals!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

