திமுகவுக்கு முட்டுக் கொடுத்தீர்கள் இல்லையா? பிரகாஷ் ராஜை விமர்சித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தொகுதி மறுவரையறை மசோதா விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜை அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்துள்ளார்.

ராஜ்மோகன் / பிரகாஷ் ராஜ்
தொகுதி மறுவரையறை மசோதா விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜை அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்து ஆதரவை விலக்கிக் கொள்ள கோரிக்கை வைத்த நிலையில் அதனை அவர் மறுத்துள்ளார்.
மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்ததற்கு நடிகரும் அரசியல் செயல்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ் ஆட்சேபணை தெரிவித்து விடியோ வெளியிட்டிருந்தார். அதில், “அவசர அவசரமாக திருத்தங்களோடு பாஜக கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதா மிகவும் ஆபத்தானது. மதம், மொழி, இனம், சிறுபான்மையினருக்கு, இந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது.
இதை அனைவருக்கும் உணர்த்திய திமுக, மதவாத சக்திக்கு துணை போவது முதுகில் குத்தும் செயல் இல்லையா? இது சுயநலமான முடிவு. திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனப் பேசியிருந்தார்.
இதனை தவெக அமைச்சர் ராஜ்மோகன் இன்று விமர்சித்துப் பேசியுள்ளார். சென்னை பெரியமேட்டில் தவெக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், ”நம் அண்ணன், நம் செல்லம், நம்மீது பாசம் வைத்திருக்கிற நடிகர் பிரகாஷ் ராஜ் என்று ஒருவர்.
அவர் நல்ல கலைஞன், தேசிய விருது வாங்கிய கலைஞன். அவர் ஒரு விடியோவில் கண்ணாடி போட்டுக்கொண்டு இந்த தொகுதி மறுவரை என்பது தப்பு இல்லையா? இது மக்களுக்கு செய்கின்ற துரோகம் இல்லையா? திமுக தொகுதி மறுவரையறைக்கு போய் ஆதரவு கொடுப்பது முதுகில் குத்துவதைப் போன்றது இல்லையா?” என்கிறார்.
இதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே எங்கள் தலைவர் சொன்னார் இல்லையா? திமுகவை நம்பாதீர்கள் என சொன்னார் இல்லையா? அப்போது திமுகவுக்கு நீங்கள் அனைவரும் சேர்ந்து முட்டுக் கொடுத்தீர்கள் இல்லையா? டிரைவர் பையன் எம்.எல்.ஏ ஆக்குவீங்களான்னு நீங்கள் கேட்டீர்கள் இல்லையா?
அந்த சாதாரண டிரைவர் மகன் தான் கொள்கையோடு இன்று நிற்கிறார் இல்லையா? மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையோடு நின்றுகொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டிலேயே கொள்கையோடு நிற்கக்கூடிய ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம்.
எனது மதிப்பிற்குரிய அண்ணன் ஆ.ராசா அவர்கள் பேசுகிறார். சமூக ஊடகங்களில் மீம் போடுகிறார்கள் என்று. எச்.ராஜாவாக மாறிவிட்ட ஆ.ராசா. வேதனையாக இருக்கிறது, எத்தனை பெரிய துரோகம் இது.
ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சொல்கிறார். 6 மாத ஆட்சி காலத்தில் அடிமட்ட ஊழலை தவெக வேரறுத்திருக்கிறது என்று. ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சொல்லியிருக்கிறார். இதைவிட என்னங்க சாதனை?” என்று பேசியுள்ளார்.
Summary
Minister Rajmohan has criticized actor Prakash Raj regarding the constituency redelineation bill issue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

