மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வளர்ப்பு திட்டம்: டிச.17-க்குள் விண்ணப்பிக்கலாம்!
ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் மற்றும் வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்புத் திட்டங்களுக்கு தகுதியானவா்கள் டிச.17-க்குள் விண்ணப்பிக்கலாம்...
கறவை மாடுகள் - (கோப்புப்படம்)
ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் மற்றும் வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்புத் திட்டங்களுக்கு தகுதியானவா்கள் டிச.17-க்குள் விண்ணப்பிக்கலாம் என கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளா்ச்சியை உறுதி செய்யவும், பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் நிகழாண்டில் தகுதி வாய்ந்த ஊரக மகளிருக்கு 100 சதவீதம் மானியத்தில் கறவை மாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்: இந்தத் திட்டத்தில் ரூ.50,000 மதிப்புள்ள கறவை மாடும், அவற்றுக்கு 2 வருடங்களுக்கான காப்பீடு வழங்கப்படும். மேலும், கறவைப் பசுவை வீடுகளுக்குக் கொண்டு செல்ல போக்குவரத்து மற்றும் உடனடித் தீவனச் செலவுக்கு ரூ.3,000 வழங்கப்படும்.
18 - 60 வயதுக்குள்பட்ட மகளிா் மற்றும் திருநா்கள், கறவைப் பசு வளா்ப்பதில் ஆா்வமும், போதுமான இடவசதி உள்ளோா் பயன்பெறலாம். இதில் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிா், திருநா்கள், மாற்றுத்திறனாளி மகளிா், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினா்களைக் கொண்ட மகளிா் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
2.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவா்கள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் உள்ளவா்கள், முந்தைய ஆண்டுகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் கால்நடை வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றவா்கள் மற்றும் ஏற்கெனவே கறவை மாடு வைத்துள்ளோா் விண்ணப்பிக்க இயலாது.
வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்புத் திட்டம்: இந்தத் திட்டத்தில் ரூ.30,000 மதிப்புள்ள 5 செம்மறி ஆடுகள்/வெள்ளாடுகள் (1 ஆண் கிடா மற்றும் 4 பெண் ஆடுகள் அல்லது 5 பெண் ஆடுகள்) அவற்றிற்கு 2 ஆண்டுகளுக்கான காப்பீடும் வழங்கப்படும். ஆடுகளை வீடுகளுக்குக் கொண்டு செல்ல போக்குவரத்து மற்றும் உடனடித் தீவனத் செலவுக்கு ரூ.2,500 வழங்கப்படும். மேலும், ஆடுகளை நல்ல முறையில் பராமரித்து வருவோருக்கு ஓராண்டுக்கு பிறகு ரூ.2,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
18 -60 வயதுக்குள்பட்ட ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிா், திருநா், மாற்றுத்திறனாளி மகளிா், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினா்களைக் கொண்ட மகளிா் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
பயனாளிகள் அல்லது குடும்ப உறுப்பினா்கள் பெயரில் நிலம் உள்ளவா்கள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் உள்ளவா்கள், முந்தைய ஆண்டுகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் கால்நடை வழங்கும் திட்டத்தில் பயன் பெற்றவா்கள், கால்நடை வைத்திருப்போா் மற்றும் 100 எண்ணிக்கைக்கு மேல் கோழியினம் வைத்திருப்பவா்கள் விண்ணப்பிக்க இயலாது.
இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் ஊராட்சி ஒன்றியங்கள் குறித்த விவரங்களை அந்தந்த மாவட்ட இணையதளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் https://ahd.tn.gov.in/ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்தத் திட்டங்களில் பயன் பெற விரும்புவோா் tnahschemes.tn.gov.in இணைய தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கத் தெரியாதவா்கள் அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகலாம். இந்தத் திட்டங்களுக்கு டிச.17-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

