மு.க. ஸ்டாலினுடன் பேசியது என்ன? காங்கிரஸ் அதிகாரப்பூர்வ பதிவு!
மு.க. ஸ்டாலினுடன் பேசியது தொடர்பாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளது குறித்து...

மு.க. ஸ்டாலின் உடனான பேச்சுவார்த்தையில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் - படம் | எக்ஸ் / காங்கிரஸ்
தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும் என மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணித் தலைவர்கள் கோரிக்கை வைத்ததாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசியது குறித்த புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது.
இத்துடன் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளதாவது:
''காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்தோம்'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.
Congress President Shri @kharge, CPP Chairperson Smt. @SoniaGandhi ji and LoP Shri @RahulGandhi, along with other INDIA Bloc leaders, met former Tamil Nadu Chief Minister & DMK President Shri @mkstalin to seek his support in opposing the proposed Delimitation Bill.
— Congress (@INCIndia) November 29, 2026
ð Chennai,⦠pic.twitter.com/7y2V5e0QZq
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா நாளை தாக்கலாகும் நிலையில், மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜகவின் மசோதாவுக்கு திமுக தலைவர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவரின் முடிவை மாற்ற இந்தியா கூட்டணித் தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இப்பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இப்பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மமதா பானர்ஜி, வேணுகோபால், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், கேரள முதல்வர் வி.டி. சதீசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
Summary
What was discussed india bloc meeting with mk stalin Congress's official account
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


