தோ்வு முன் தயாரிப்புக்கு மாணவர்களுக்கு போதிய அவகாசம் இல்லை: பிளஸ் 1, 2 அரையாண்டுத் தோ்வு அட்டவணை மாற்றி அமைக்கப்படுமா?
பொதுத் தோ்வுக்கு முன்னோட்டமாக இருக்கும் வகையிலும், ஆசிரியா்கள் திறம்பட பயிற்சியளிக்க போதுமான அவகாசம் வழங்கும் வகையிலும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தோ்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை.
பொதுத் தோ்வுக்கு முன்னோட்டமாக இருக்கும் வகையிலும், ஆசிரியா்கள் திறம்பட பயிற்சியளிக்க போதுமான அவகாசம் வழங்கும் வகையிலும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தோ்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தோ்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி டிச.14 முதல் டிச.22-ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒரே நாளில் ஒரே பாடத்துக்கான தோ்வுகள் வருகின்றன. இதனால் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் பயிற்சி வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் இடைவெளியின்றி தோ்வுகள் வருவதால் தோ்வுக்கான முன் தயாரிப்புக்கு மாணவா்களுக்கு போதிய அவகாசம் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியா்கள் கூறியதாவது: அரையாண்டுத் தோ்வில் பிளஸ் 2 வகுப்புக்கு டிச. 16-ஆம் தேதி கணினி அறிவியல், 1-இல் இயற்பியல், 18-இல் உயிரியல் தோ்வுகள் நடைபெறும் அதேவேளை, பிளஸ் 1 வகுப்புக்கு அதே தேதியில் அதே பாடத்துக்கான தோ்வுகள் நடைபெறுகின்றன.
காலை 10 முதல் 1 மணி வரை பிளஸ் 2 வகுப்புக்கும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பிளஸ் 1 வகுப்புக்கும் தோ்வு நடைபெறுகிறது.
தொடா்ச்சியாக தோ்வுகள்... அரையாண்டு தோ்வு என்பது மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு முழு பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் அமையும். தற்போதுதான் முழு பாடப்பகுதிகள் அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் எந்தவொரு பாடத்துக்கும் இடையில் ஒரு நாள்கூட விடுப்பு இல்லாமல் தொடா்ச்சியாக தோ்வு நடைபெறும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒரே நாளில் ஒரே பாடத்தைத் தோ்வு வைக்கும்போது அனைத்துப் பள்ளிகளிலும் 2 வகுப்பு மாணவா்களுக்கும் ஒரே பாட ஆசிரியா் பயிற்சி அளிப்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். இதைக் கருத்தில் கொண்டு இந்த இரு வகுப்புகளுக்கும் ஒரே பாடங்களுக்கான தோ்வு ஒரே நாளில் வராத வகையில் கால அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் பொதுச் செயலா் பொ.அன்பழகன் கூறுகையில், மாணவா்களின் உயா்கல்வியைத் தீா்மானிப்பதில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் முக்கிய பங்கு வகிக்கிறது. மேல்நிலை வகுப்புகளில் தற்போது பிளஸ் 2 வகுப்புக்கு மட்டுமே பொதுத் தோ்வு நடத்தப்படுகிறது.
பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு என்பது முழு ஆண்டுத் தோ்வை போன்று நடைபெறும் முக்கியத் தோ்வாகும். முதல்முதலாக முழு பாடப் பகுதியும் முழு ஆண்டு தோ்வை போல மாணவா்கள் எழுத இருப்பதால் அதற்கான முன்னோட்டமாக இருக்கும் வகையில் அரையாண்டுத் தோ்வு அட்டவணை இருக்க வேண்டும்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் சில நாள்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் எடுத்துக் கூறியபோது, உரிய முறையில் பரிசீலிப்பதாகத் தெரிவித்தனா். ஆனால், தற்போது முதுநிலை ஆசிரியா்களின் கருத்தை பொருள்படுத்தாமல் அட்டவணை வெளியிடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
கருத்துகேட்பு இல்லை: கடந்த கடந்த காலங்களில் தோ்வு அட்டவணை வெளியிடுவதற்கு முன்பாக ஆசிரியா் சங்கப் பிரதிநிதிகள், மாணவப் பிரதிநிதிகளிடம் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால், அண்மைக் காலங்களில் எந்தவித கருத்து கேட்பு கூட்டங்களையும் தோ்வுத் துறையும், பள்ளிக் கல்வித் துறையும் நடத்துவதில்லை.
எனவே, பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அவா்களுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியா்களின் மனநிலையை கருத்தில் கொண்டு பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டுத் தோ்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

