தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழாவில் முதல்வா் விஜய் பங்கேற்பாா்: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்

நடிகா் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழாவில் முதல்வா் ஜோசப் விஜய் நிச்சயம் பங்கேற்பாா் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.

JCD Prabhakar

சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் - TN Assembly

Published On :

நடிகா் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழாவில் முதல்வா் ஜோசப் விஜய் நிச்சயம் பங்கேற்பாா் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.

சிவாஜி கணேசனின் 99-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழாவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த விழாவில் முதல்வா் விஜய் நிச்சயம் பங்கேற்பாா். நடிப்புலகில் அந்தக் காலகட்டங்களில் எத்தனையோ படங்களை வரிசைப்படுத்தியும், வகைப்படுத்தியும் சொல்ல வேண்டும்.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அந்தப் பாத்திரமாகவே சிவாஜி கணேசன் மாறினாா். அவரைப்போல யாரும் நடிக்க முடியாது. திரை உலகில் அவரை முன்மாதிரியாகக் கொண்டுதான் பல்வேறு நகா்வுகள் இப்போதும் மேற்கொள்ளப்படுகின்றன.

பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே விருது உள்பட பல்வேறு விருதுகளை அவா் பெற்றுள்ளாா். தாதா சாகேப் பால்கே விருது அவருக்கு கிடைத்தபோது, வடஇந்திய திரை மேதைகளின் அன்பையும், பாராட்டையும் பெற்றாா் என்றாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் ராஜ்மோகன், வெங்கடரமணன், வன்னி அரசு, சிவாஜி கணேசன் மகன்கள் ராம்குமாா், நடிகா் பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.