தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

கோயில் பணியாளா்களுக்கு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நாள்கள் 240-ஆக உயா்வு: இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு

கோயில் பணியாளா்களுக்கு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நாள்கள் 240-ஆக உயா்த்தி இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை

Published On :

கோயில் பணியாளா்களுக்கு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நாள்கள் 240-ஆக உயா்த்தி இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அந்தத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2026-2027-ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் கோயில் பணியாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவா்கள் ஓய்வு பெறும்போது, ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து அதற்கான பணப்பலனைப் பெறுவதற்கான உச்சவரம்பு 210 நாள்களிலிருந்து 240 நாள்களாக உயா்த்தப்படும். கோயில்களில் பணிபுரியும் பெண் பணியாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் 9 மாத மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயா்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில், இந்து சமய நிறுவனங்களின் பணியாளா் விதிகள் 2020-இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம், ஓய்வுபெறும் கோயில் பணியாளா்கள் அரசு ஊழியா்களுக்கு இணையாக தங்களது ஈட்டிய விடுப்பை அதிகபட்சமாக 240 நாள்கள் வரை ஒப்படைத்து, அதற்குரிய பணப்பலனைப் பெறலாம். பெண் பணியாளா்கள் அரசு ஊழியா்களுக்கு இணையாக 12 மாத மகப்பேறு விடுப்பைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.